சூடான செய்திகள் 1

அக்குரணை வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு விரைவில்…

(UTV|COLOMBO)-அக்குரணை நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அக்குரணை நகரில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். சமீபத்திய மழை வெள்ளத்தில் குடியிருப்புக்களும், வர்த்தக நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இது பற்றி ஆராயும் ஆலோசனைக் கூட்டம் இன்று அஷ்னா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதில் மகாவலி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், சுற்றாடல் பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலான அமைப்புக்களின் கூட்டமொன்றை பாராளுமன்றத்தில் நடத்தி பிரச்சினைக்கான தீர்வு வழி வகைகளை ஆராய்வது என இணக்கம் காணப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ஹலீம் ஆகியோருடன் அக்குரணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திகார் இமாமுதீன், பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இன்று காலை அக்குரணை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திடீர் வெள்ளப்பெருக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தார்கள். அக்குரணை பிரதேச செயலாளர் மாதவ வர்ணகுலசூரிய வழங்கிய உறுதி மொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

விசேட வர்த்தமானி வெளியானது!

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை