உள்நாடு

ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஃபைசர் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று(05) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளன.

இலங்கை கொள்வனவு செய்துள்ள 2 இலட்சம் தடுப்புசி டோஸ்களின் முதல் தொகுதியாக 26,000 ஃபைஸர் தடுப்பூசி டோஸ்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபைசர் தடுப்பூசியை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை”

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு