பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளில் இருந்து விலக கத்தார் முடிவு

(UTV|QATAR)-சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகின்ற நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்ற நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் (ஒபெக் அமைப்பு) இருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விலகப் போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தோஹாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று(04) வெளியிட்ட கத்தார் நாட்டு எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி, “நாங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுவோம்.
ஆனால், எங்கள் நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment