தீபிகா கவர்ச்சி வெள்ளோட்டம்…

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நட்சத்திர காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதிகள் ஆகினர். திருமணத்துக்காக 1 கோடி ரூபாய் செலவில் நகைகள் வாங்கினார் தீபிகா. இத்தாலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோடிக்கணக்கான செலவில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தவிர பெங்களூர், மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருமணத்தையொட்டி சுமார் ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார் தீபிகா. இந்நிலையில் அமெரிக்க இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்கு படுகவர்ச்சியாக தீபிகா படுகோன் போஸ் அளித்திருப்பது ரசிகர்களின் புருவத்தை உயர வைத்துள்ளது. சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்திருக்கும் தீபிகாவுக்கு சிகை அலங்கார நிபுணர் ஹேர் ஸ்டைல் செய்யும் புகைப்படம் வைரலாகி உள்ளது.
அதைவிட தீபிகாவின் படுகவர்ச்சியான காலழகு இளவட்டங்களை ஈர்த்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தீபிகா கவர்ச்சியாக நடிக்க மாட்டார் என்று யாராவது வதந்தி பரப்புவதற்கு முன்னதாகவே தான் தொடர்ந்து கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்பதை மறைமுகமாக உணர்த்தவே இப்படியொரு கவர்ச்சி போஸ் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment